ETV Bharat / state

முதலமைச்சரின் தாயாரின் இறுதி ஊர்வலம்: பெருந்திரளானோர் பங்கேற்பு! - முதலமைச்சரின் தயாரின் இறுதி ஊர்வலம்

சேலம்: வயது மூப்பு காரணமாக காலமான, தமிழ்நாடு முதலமைச்சரின் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Cm mother expired funeral
Cm mother expired funeral
author img

By

Published : Oct 13, 2020, 1:51 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), கடந்த சில காலமாக வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே மருத்துவச் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதையடுத்து, முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை சேலம் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை (செப். 13) நள்ளிரவு 12.15 மணியளவில் அவர் மாரடைப்பால் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதலமைச்சரின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

தாயார் இறந்ததை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சிலுவம்பாளையம் வந்து சேர்ந்தார். அங்கு அவர் தனது தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், ராஜேந்திரபாலாஜி சரோஜா, கே.பி. முனுசாமி எம்.பி., சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஸ்தாஸ், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தயாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சிலுவம்பாளையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு திறந்த வேனில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.