சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழைய பேருந்து நிலையத்தை புனரமைத்து ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக சேலத்தில் அமைய உள்ள இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம் சுமார் 92 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வரும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாக்கடை நகரமான சேலம் மாநகரம்! - ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?