ETV Bharat / state

சேலம் ரயிலில் தொடர் கொள்ளை: டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை

சேலம்: சேலம் ரயிலில் தொடர் கொள்ளை நடைபெறுவது தொடர்பாக ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சைலேந்திர பாபு ஆலோசனை
author img

By

Published : May 6, 2019, 2:14 PM IST

ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் ரயிலில் கடந்த சில தினங்களாகவே தங்க நகைகள், பொருட்கள் என கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவருகிறது.

இந்த நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், டிஐஜி பாலகிருஷ்ணன், காவல் துணை ஆணையர் தங்கதுரை, ரயில்வே காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சைலேந்திர பாபு ஆலோசனை

மேலும், இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பெரிய அளவில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

சேலம் ரயிலில் நடைபெறும் தொடர் கொள்ளை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் தீவிர ஆலோசனை!

ரயில்வே துறை டிஜிபி சைலேந்திரபாபு  தலைமையில்

டி .ஐ .ஜி  பாலகிருஷ்ணன், டி.சி .தங்கதுரை மேலும் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள்

சேலத்தில் ரயிலில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகை யில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த சில தினங்களாகவே ஈரோட்டில் இருந்து சேலம் வரும் ரயிலில் பயணிகளிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களை பரித்து செல்வதாக புகார்கள் வந்துள்ளது அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில்  ரயில்வே துறை காவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை முதல் கட்டமாக ஆய்வு மேற்கொண்டதில் வடமாநிலத்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 மேலும் ஈரோட்டில் இருந்து சேலம் வரும் அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு வருகிறது  இன்று அதிகாலை கொள்ளை நடந்த பகுதிகளில் ரயில்வே துறை காவல் துறை அதிகாரியான சைலேந்திரபாபு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் கொள்ளையர்களை பிடிக்க வியூகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் எந்த மாதிரியான நபர்கள் என்பது குறித்தும்  காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.