ETV Bharat / state

சேலத்தில் இன்று இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை - சேலத்தில் கறி கடைகளுக்கு விடுமுறை

சேலம்: அனைத்துச் சந்தைகளிலும் உள்ள இறைச்சி, மீன் கடைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் ஞாயிறு தோறும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை

author img

By

Published : Apr 18, 2021, 6:31 AM IST

சேலம் மாநகராட்சியின் சந்தைகளிலுள்ள இறைச்சி, மீன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாநகரப் பகுதிகளில் விடுமுறை நாள்களில் சந்தைகளிலுள்ள மீன், இறைச்சி அங்காடிகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகைதருவதாலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேலம் மாநகராட்சியிலுள்ள மீன், இறைச்சிக் கடைகளுக்கு வாரம்தோறும் ஞாயிறுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுகிறது.

மாநகராட்சியின் மறு அறிவிப்பு வரும்வரை சந்தைகளில் மீன், இறைச்சிக் கடைகள் நடத்தும் வியாபாரிகளும், குத்தகைதாரர்களும், சந்தைக்கு வரும் பொதுமக்களும் மாநகராட்சியின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: மீனவர்கள் தடைக்கால நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்த கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.