ETV Bharat / state

"மாணவர்களின் தனித் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்!

author img

By

Published : Aug 12, 2023, 11:01 PM IST

பெற்றோர் மாணவர்களின் தனித்திறமையைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை   அமைச்சர்கள்  கே.என்.நேரு, அன்பில் மகேஷ் வழங்கினர்.

சேலம்: மரவனேரி பாரதி வித்யாலயா சங்கத்தின் பவளவிழா நிறைவு விழா சங்கத்தின் தலைவர் சீனி. துரைசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பவள விழா நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

மேலும் பல்நோக்கு அரங்கத்தினை திறந்து வைத்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தையும் திறந்து வைத்தார். இதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "மாணவ, மாணவிகள் நன்கு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்ற மாணவர்களுடன் ஒப்பிடக்கூடாது அவர்களின் தனி திறமையை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தப் பள்ளி 75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளது .மேலும் பல்வேறு உயரங்களுக்கு செல்ல வாழ்த்துகிறேன் என்றார்.

இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி வருகிறார். கல்வி துறையும், மருத்துவத்துறையும் இரண்டு கண்கள் என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு துறைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இரண்டு அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பாரதி வித்யாலயா பள்ளியில் ஏழைகள் பயன்படும் வகையில் கல்வி கற்றுத் தரப்படுகிறது. நல்ல கல்வியைத் தர வேண்டும். இந்தப் பள்ளி 100 ஆண்டுகள் தொடர்ந்து சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என்றார்.இவ்விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ,முதன்மைக் கல்வி அலுவலர்,மாநகராட்சி மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள்,மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

இதையும் படிங்க : சாதி, இன உணர்வை தவிர்ப்பதற்காக நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.