ETV Bharat / state

"விமல் ஆளுங்க காப்பாத்து ஹரி" இளம்பெண்ணின் கடிதத்தால் அதிர்ந்த காவல்துறை - ரத்த கறையால் சுவற்றில் எழுதி மாயமான இளம்பெண்

சேலம்: "விமல் ஆளுங்க காப்பாத்து ஹரி" என ரத்தததினால் சுவற்றில் எழுதி வைத்து விட்டு பெண் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Hockey Bat
author img

By

Published : Aug 28, 2019, 8:17 AM IST

சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், குளிப்பதற்காக வீட்டின் குளியல் அறை சென்ற போது "விமல் ஆளுங்க காப்பாத்து ஹரி" என்று ரத்தத்தினால் சுவற்றில் எழுதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மாயமான இளம்பெண்ணின் வீட்டில் காவல்துறையினர் விசாரணை

பின்னர் உடனே இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்தக் கறையால் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்து ஹரிஹரனிடம் விசாரணை செய்தனர். மேலும் ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்தனர். சுவரில் எழுதப்பட்டிருந்த விமல் என்பவர் ஹரிஹரனின் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது பெயரை ஏன் தமிழ்ச்செல்வி எழுதி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:சேலத்தில் வீட்டின் குளியல் அறையில் ரத்தத்தால் காப்பாற்றுங்கள் என அபாய வார்த்தைகளை எழுதிவைத்த பெண் காணாமல் போன சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Body:சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வரும் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டின் குளியல் அறையில் தனது மனைவி தமிழ்ச்செல்வி ரத்தத்தினால் "விமல் ஆளுங்க காப்பாத்து ஹரி" என்று எழுதப்பட்டு இருப்பதாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரிஹரன் இடம் விசாரணை நடத்தினார். மேலும் குளியலறையில் இரத்தத்தினால் எழுதப்பட்ட வாசகங்கள் மட்டும் ரத்தக்கரை படிந்த ஹாக்கி மட்டை ஆகியவை வீட்டில் கிடந்த தன் அடிப்படையில் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு தடயங்களும் பதிவு செய்யப்பட்டன. ஜவுளித் தொழில் செய்து வரும் ஹரிஹரன் இடம் பணியாற்றி வருபவர் விமல். இந்த நிலையில் விமல் பெயரை குறிப்பிட்டு குளியலறையில் எழுதி இருப்பது பெரும் சந்தேகங்களை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ் செல்வியின் கணவர் ஹரிஹரன் மற்றும் விமல் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.