ETV Bharat / state

கல்யாணம் ஆகனும்னா! கவர்மெண்ட் வேலை வேணும்... நூதன முறையில் கொள்ளையடித்த தரகர்

திருமணம் நடக்க வேண்டும் என்றால் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்று கூறி இளம் பெண்ணிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

நூதன முறையில் கொள்ளையடித்த தரகர்
நூதன முறையில் கொள்ளையடித்த தரகர்
author img

By

Published : Mar 7, 2023, 4:08 PM IST

கல்யாணம் ஆகனுமா! கவர்மெண்ட் வேலை வேணூம்...நூதன முறையில் கொள்ளையடித்த தரகர்

சேலம்: தலைவாசல் தெற்கு தியாகனூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி - ஆறுமுகம் தம்பதியரின் மகள் நித்யா(32). இவர் பி.எட் படித்த பட்டதாரி. இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் பகுதியில் வசித்து வருபவர், செல்லமுத்து (42). இவர் நித்தியாவிற்கு வரன் பார்த்து தருவதாகக் கூறி குடும்பத்தாருக்கு அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் நித்யாவின் குடும்பத்தாரிடம் உங்கள் மகளுக்கு அரசு வேலை இருந்தால் தான் மணமகன் கிடைப்பார் என்று கூறியுள்ளார். பின்னர் அரசு வேலை வாங்கித் தர ரூ.20 லட்சம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்லமுத்து பேச்சில் மயங்கிய நித்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் கடந்த 2018ஆம் ஆண்டில் 20 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்கி உள்ளனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி செல்லமுத்து அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு அவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து செல்லமுத்து தாக்குதல் நடத்தி உள்ளார்.

ஆகையால், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் நித்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். மனு மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரிடம், நேரடியாக நித்யா மற்றும் அவரது தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டோர் நேரடியாக புகார் மனுவை அளித்துள்ளனர்.

மேலும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கியும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபரை கைது செய்து தங்களது பணத்தை பெற்றுத் தரும் படியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக நித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொது இடங்களில் போஸ்டர்.. சென்னை மாநகராட்சி விடுத்த வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.