ETV Bharat / state

கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

சேலம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்ட கிராமங்களில் பஞ்சாயத்துகள் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
author img

By

Published : Apr 2, 2020, 11:48 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை கூறும் புள்ளிவிவரங்கள் பொதுமக்கள் மத்தியில், மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் எப்படியாவது கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கிராம அளவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் குவியும் குப்பைகளை அகற்றுதல், சாக்கடை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், வீடுகள் தோறும் கிருமிநாசினி மருந்து தெளிப்பது என்று பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க பொதுமக்கள் ஒவ்வொருவரும் என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீராணம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், கிராமம் முழுக்க கிருமிநாசினி மருந்து தெளித்து மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார். இவரது இந்தச் செயலை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், "பொதுமக்கள் அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள 144 தடை உத்தரவை முழுமையாகக் கடைபிடித்து, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

சுற்றுப்புறத்தையும், தங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தொழிலாளர்களுக்குப் பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.