சேலம்: பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மாபெரும் புத்தக திருவிழா, கடந்த 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. 30ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் நாள்தோறும் பல்வேறு கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த புத்தகத் திருவிழாவில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து அரங்கிலும் சென்று புத்தகங்களை வாசித்த மாவட்ட ஆட்சியருடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “புத்தகத் திருவிழாவில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள், 63,00,578 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்கள் உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதும் விற்பனையும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயண நேரம் குறைப்பு என்ற பெயரில் மீண்டும் 8 வழிச்சாலை - சீமான்