தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள், கண் துஞ்சாமல் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க இயலாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு, தனியார் அமைப்பினர் உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், தூய்மைப் பணியாளர்களின் இடத்திற்கே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார். கரோனா நிவாரணப் பொருட்களை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார் இதில் ஏற்கெனவே ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 ஊராட்சிகளுக்கு 345 தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிலையில், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.