நடைபாதை உணவு கடைகளிலும், தெருவோர திறந்தவெளி உணவு கடைகளிலும் அதிக அளவு பொதுமக்கள் உணவு உண்டு வருகின்றனர் . இதனால் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பொது மக்களுக்கான உணவு பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது .
இதன்படி தெருவோர உணவு கடை நடத்தும் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரமான சுத்தமான உணவு வழங்க மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தானியங்கள் பயிரிடும் விவசாயிகள் ஆகியோருக்கு ஒருநாள் விளக்க கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இளவரசன், தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம், ஒரு மென் பொறியாளரின் லாபகரமான விவசாய அனுபவங்கள், உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்களை லாபகரமானதாக ஆக்குவது எப்படி , உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கான திட்டங்கள். சேலத்தில் திட்டமிடப்பட்டுள்ள உணவு பூங்கா தொழில்நுட்பம் ஆகியவை குறித்து, துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்தரங்கின் மூலம் ஆலோசனைகளை வழங்கினர்.
சிறுதானிய உணவு பண்டங்கள் உற்பத்தி செய்வோர் சுகாதாரமாகவும் ஆரோக்கியமான உணவாகவும் தயாரிக்க வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சேலம் வந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல்: மனைவிக்கு நாளை பரோல் கிடைக்குமா?