ETV Bharat / state

சேலத்தில் ராமர் பாத கோயில் விவகாரம்: ஊர் மக்கள், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை! - today lates news in salem

Salem Ramar padam issue: சேலத்தில் ராமர் பாத கோயில் பகுதிக்கு செல்ல காவல் துறையை வைத்து செயில் நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளதால் ஊர் மக்கள், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ramar padam issue
சேலத்தில் ராமர் பாத கோயில் விவகாரம்; ஊர் மக்கள், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 6:27 PM IST

சேலத்தில் ராமர் பாத கோயில் விவகாரம்; ஊர் மக்கள், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

சேலம்: மாமாங்கம் பகுதியில அமைந்துள்ள தொன்மையான புராதன காலத்தைச் சேர்ந்த ராமர் பாதத்தை வழிபட செயில் ரீபேக்ட்டரி நிறுவன (Steel Authority of India Limited - SAIL) அதிகாரிகள் கடந்த 15 ஆண்டுகளாக தடை விதித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் பொறுமை இழந்த பக்தர்கள் ஒன்று கூடி அதிரடியாக செயில் அதிகாரிகள் ஏற்படுத்திய தடையை மீறி, பழைய வெள்ளைக்கல் சுரங்கத்தின் உள்ளே சென்று ராமர் பாதத்தை வழிபட்டனர். மேலும் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் 'ராமர் பாதம்' கோயிலை நோக்கி அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்து வரும் செயில் நிறுவன அதிகாரிகள் மீண்டும் இந்த வழித்தடத்தை மூடவும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமர் பாதம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ராமர் பாதம் அமைந்த தொன்மையான பகுதியை ஆய்வு செய்ய வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, ராமர் பாதம் அமைந்துள்ள இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் புதன்கிழமை (டிச.6) நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும், கோயில் அமைந்துள்ள பகுதியில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் அளவு குறித்தும் அதன் உரிமையாளர் எழுப்பி வரும் கேள்விகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்த்துறையினர் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சேலம் உருக்காலை உயர் அதிகாரிகள் செயில் ரீபேக்ட்டரி நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளை உடனடியாக அழைத்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொன்மையான இடத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும், நில உரிமையாளரின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து நில பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை சேலம் உருக்காலை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தொன்மையான ராமர் பாதத்தை மீட்க பாமக மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு போலீசார் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (டிச.7) மீண்டும் கோயிலுக்கு செல்ல காவல் துறையினர் திடீர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், "எங்களது சுற்று வட்டார கிராம மக்களிடையே எந்த கருத்து மோதலோ அல்லது வேறுபாடுகளோ இல்லை. காலம் காலமாக ராமர் பாதம் வழிபாடு இங்கு நடந்து வருகிறது. ஆனால் செயில் நிர்வாகம் வேண்டும் என்றே எங்களை உள்ளே விடாமல் தடுத்து வருகிறது. இந்தச் செயல் எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

தடையை நீக்கவில்லை என்றால் அனைத்து பொதுமக்களையும் ஒன்று திரட்டி வரும் சனிக்கிழமை அன்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன் கோவிலுக்குள் செல்ல உள்ளோம். மேலும் கோவிலுக்குள் நூழையைத் தடைவிதித்தால் 1000க்கும் மேற்பட்டோரைத் திரட்டி சேலம் - பெங்களூரு பை பாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் நிவாரணம் அறிவிப்பில், ரூ.1011.29 கோடியா? ரூ.450 கோடியா? - உண்மை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.