சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் சிறப்பாகச் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுவரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் 50 பேரை கௌரவிக்கும் நிகழ்ச்சியானது இன்று ( ஏப்ரல் 28) நடைபெற்றது.
நெடுஞ்சாலை நகர் நலக்குழுக் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியிருப்புவாசிகள் ஒன்றுசேர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்குச் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தியதுடன், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
குடியிருப்புவாசிகளின் இந்தக் கெளரவிப்பு நிகழ்வானது தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.