சேலம்: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டது.
நிவர் புயல் நேற்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே இன்று (நவ.25) இரவு அல்லது நாளை (நவ.26) காலைக்குள் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் 88 தூய்மைப் பணியாளர்கள், 6 மேற்பார்வையாளர்கள் 4 மின் பணியாளர்கள், 3 குடிநீர் இணைப்புப் பணியாளர்கள், 6 செயல் அலுவலர்கள், 3 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 110 அரசுப் பணியாளர்கள் நிவர் புயல் மீட்புப் பணிக்காக கடலூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நிவர் புயல் முன்னெச்சரிக்கை: சென்னையின் முக்கியச் சாலைகள் மூடல்