ETV Bharat / state

உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 21, 2020, 7:49 PM IST

சேலம்: ஜலகண்டாபுரம் அருகே உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பவர் கிரிட் உயர்மின் கோபுரம் விவகாரம் ஜலகண்டாபுரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி பவர் கிரிட் உயர்மின் கோபுரம் விவகாரம் Salem Power Grid Tower Protest Jalakandapuram Farmers Protest Nangavalli Power Grid Tower Protest
Jalakandapuram Farmers Protest

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலத்தில் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், ஜலகண்டாபுரம் அருகேயுள்ள பழகனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைத்தற்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று போராடி இழப்பீடு கிடைக்காத மன வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, , இன்று பவர்கிரிட் அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பெருமாளின் விவசாய நிலத்தில் காவல்துறையினர், வருவாய் துறையினர் உதவியுடன் அத்துமீறி நுழைந்து வேலை செய்ய வந்தனர். அப்போது, பெருமாள் குடும்பத்தினர், அவர்களைக் கண்டித்து வேலையைத் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். இதையடுத்து, பெருமாளின் மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பெருமாளின் மகன்கள் மூன்று பேர் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தனர். அதில், தங்களுக்கு முறையான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். அதன்பின், உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஜலகண்டபுரம் பகுதி அனைத்து ஊர் பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி ஆர்பாட்டம் செய்யும் விவசாயிகள்

போராட்த்தினைத் தொடர்ந்து, ஜலகண்டாபுரம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

என்னை எம்.பி. ஆக்கவுள்ள மக்களுக்கு நன்றி! பவர் ஸ்டார் அதிரடி அறிவிப்பு... அரசியல் கட்சிகள் 'கிலி'

Intro:ஜலகண்டாபுரம் அருகே பழகனூரில் உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.Body:

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பவர் கிரிட் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலத்தில் அமைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நங்கவள்ளி அடுத்த ஜலகண்டாபுரம் அருகே, விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைத்தற்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று 3மாதத்திற்கு முன்பு போராடிய பெருமாள் என்ற விவசாயி , இழப்பீடு கிடைக்காத மன வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் பெருமாளின் விவசாய தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து , வேலை செய்ய பவர்கிரிட் அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய் துறை உதவியுடன் வந்தனர்.

அவர்களைக் கண்டித்து வேலையைத் தடுத்த பெருமாள் குடும்பத்தினர், போராட்டம் செய்தனர்.

மேலும் அவர்களில் இறந்து போன பெருமாளின் மருமகனை மட்டும் காவல்துறை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் மகன்கள் மூன்று பேரும் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தனர். அவர்களின் கோரிக்கையான முறையான இழப்பீடு கொடுத்துவிட்டு அவரது தோட்டத்தில் கோபுரம் அமைக்க வேண்டும் எனவும், அந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜலகண்டபுரம் பகுதியில் இருந்து அனைத்து ஊர் பொதுமக்களும் விவசாயிகளும்,முற்றுகையிட்டனர்.

Conclusion:
இதனையடுத்து போராட்டம் செய்தவர்களை ஜலகண்டாபுரம் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.