சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - மேட்டூர் இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனால் தற்போது, சேலம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் அணை மார்க்கத்தில் இருவழிப்பாதை பணி நிறைவடைந்துள்ளது.
சேலம் - ஓமலூர் வரையிலான 12.3 கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை திட்டத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவுற்று மின்வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம்- ஓமலூர் இருவழிப்பாதையில் சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சோதனை ஓட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ரயில் அதிவேகமாக இயக்கப்படுவதால், தண்டவாளம் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்றும், தண்டவாளத்தை கடக்கக் கூடாது என்றும், சேலம் ரயில்வே கோட்டத்தின் மூலம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, பெங்களூரு தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான வல்லுநர் குழுவினர் சேலம் - ஓமலூர் வழித்தடத்தில் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். பின்னர், சோதனை ஓட்டத்தின் போது, தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவின் முதன்மை நிர்வாக அலுவலர் வி.கே.குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:Palani - கோயில் தேவஸ்தான கட்டடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஆய்வு செய்ய உத்தரவு