டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, அத்தொடர்களை வென்று இன்று (ஜன.21) நாடு திரும்பியது. பிரிஸ்பேனிலிருந்து மும்பைக்குச் சென்ற ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், பிரித்வி ஷா ஆகியோர்களை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதேபோல், பிரிஸ்பேனிலிருந்து ரிஷப் பந்த் டெல்லி சென்றார். பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்திற்கு வந்தார்.
பின்னர், அங்கிருந்து சாரட் வண்டியில் இன்று (ஜன.21) மாலை 5 மணியளவில் சேலம் சின்னப்பம்பட்டிக்கு வந்த நடராஜனை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிங்க: நடராஜன் குறித்து சர்ச்சையை கிளப்பும் வார்னே: ட்விட்டரில் ரசிகர்கள் பதிலடி!