சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏழு பேரும், அதிமுக சார்பில் ஆறு பேரும் சுயேச்சையாக ஆறு பேரும் ஒன்றியக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுப்பப்பட்ட நிலையில் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 10 ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
திமுக, அதிமுக என எவருக்கும் தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் தங்களுக்கு ஆதரவான ஒன்றியக் குழு உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள திமுக சார்பாக பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதையும் படியுங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!