ETV Bharat / state

ஆடி முதல் நாளில் தேங்காயை சுடும் வினோத திருவிழா! - ஆடி திருவிழா

சேலம்: ஆடி மாத பண்டிகையை வரவேற்கும் வகையில் ஆடி மாத முதல் நாளன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தேங்காய்
author img

By

Published : Jul 18, 2019, 7:58 AM IST

சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுமண தம்பதியர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெண்கள் கொண்டாடிய திருவிழா

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இந்தத் தேங்காய் சுடும் பண்டிகை காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேங்காயின் உள்ளே வெல்லம் , அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை அடைத்து அதை அழிஞ்சி மர குச்சியில் நுழைத்து, நெருப்பில் சுட்டு அந்தத் தேங்காயை உடைத்து விநாயகருக்கு படையலிட்டு பக்தர்கள் ஆடி பண்டிகையை கொண்டாடினர்.

சிறுவர்கள் தேங்காய் சுடுதல்

Intro:ஆடி மாத பண்டிகையை வரவேற்கும் வகையில் ஆடி மாத முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு விநாயகருக்கு படையல் இட்டு பக்தர்கள் ஆடி பண்டிகையை கொண்டாடினர்.

Body:சேலம் ,ஈரோடு , தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது மரபு.

மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்த தேங்காய் சுடும் நிகழ்ச்சி இன்று சேலத்தில் விமர்சையாக நடைபெற்றது.

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைபெற்ற மகாபாரத யுத்தத்தின் தொடக்க நாள் ஆடி மாதம் என்பது ஐதீகம்.

மகாபாரதப் போர் தொடர்ந்து 18 நாட்கள் ஆடி மாதத்தில் நடைபெற்று இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்று தர்மத்தை நிலைநாட்டினர் என்பது புராண வரலாறு கூறும் செய்தி.

அந்த வகையில் இன்று சேலத்தில் புதுமண தம்பதியர் மற்றும் பெண்கள் பங்கேற்ற தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது .

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இந்த தேங்காய் சுடும் பண்டிகை மரபு காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தேங்காயின் உள்ளே வெல்லம் , அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை அடைத்து அதை அழிஞ்சி மர குச்சியில் நுழைத்து, நெருப்பில் சுட்டு அந்தத் தேங்காயை உடைத்து விநாயகருக்கு படையல் இட்டு பக்தர்கள் ஆடி பண்டிகையை கொண்டாடினர்.

Conclusion:ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை சேலம் மாவட்டத்தின் கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப் பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.