சேலம்: மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் தர்மன். மாதங்காட்டை சேர்ந்த 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீவட்டிப்பட்டி காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: Audio Leak: 'என்னை சந்தோஷமா வெச்சிக்கோ..!' - மிரட்டும் சாமியார்