ETV Bharat / state

நெகிழிப் பை பயன்படுத்திய பிரபல இனிப்பகம்: 2 லட்சம் அபராதம் விதிப்பு

சேலம்: தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது.

seized the banned plastic bag
author img

By

Published : Oct 19, 2019, 2:37 PM IST

சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 3 டன் நெகிழிப் பைகளை வைத்திருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி ஆணையர், தனியார் லாலா இனிப்பு கடையின் உரிமையாளருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்தார். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலர்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், நெகிழிப் பைகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகரத்தில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை கடைகளில் பயன்படுவத்துவது தெரிந்தால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஏழு தமிழர்கள் சிறையில் இருப்பது மன வலியைத் தருகிறது - சீமான்

Intro:சேலத்திலுள்ள லாலா ஸ்வீட் கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி ஆணையர் பறிமுதல் செய்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தார்.Body:
சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோவில் அருகிலுள்ள தனியார் லாலா ஸ்விட் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கடையின் குடோனில் 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 3 டன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து 3 டன் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து தனியார் லாலா ஸ்விட் கடையின் உரிமையாளருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் அபாரதமும் விதித்தார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகரத்தில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுவத்துவது தெரிந்தால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தொடர்ந்து ஆய்வுகள் சேலம் மாநகர பகுதிகள் முழுவதும் நடைபெறும் என ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.