இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான், வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால், பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இதனால் புனித ரமலான் தினத்தன்று தொழுகை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்த ரமலான் பண்டிகையன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திறந்தவெளி அரங்கம் அமைத்து தர வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினர் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் மாவட்டத் தலைவர் முகமது யாகூப் கூறுகையில், "புனித ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வழக்கம்போல் கொண்டாட சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் திறந்தவெளி அரங்கம் அமைத்து தரவேண்டும் என்றும் பண்டிகை நாளன்று இறைச்சிக் கடைகள் வழக்கம் போல் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகத்" தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிட்ட கரோனா நோயாளிகள்; சேலத்தில் அடாவடி!