ETV Bharat / state

கட்டுமானப் பொருட்களாக மாறும் கழிவுகள்! - அசத்தும் கல்லூரி

author img

By

Published : Nov 27, 2019, 7:25 PM IST

சேலம்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை மறுசுழற்சி செய்து, அழகிய அலங்காரப் பொருட்களாகவும், கட்டுமானப் பொருட்களாகவும் மாற்றி அசத்துகிறது சேலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி. அது பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

plastic bricks
plastic bricks

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளபோதிலும், வணிகர்களும், மக்களும் அதற்குப் போதிய ஒத்துழைப்பு தராததால், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்துவதே இதற்கு ஒரே வழி என்று உணர்ந்த சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி, பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவுசெய்தது.

கழிவுகளாக எறியப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூள் தூளாக்குகின்றனர். அவற்றை கூழ் போல செய்து மீண்டும் அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து அசத்துகின்றனர். சுற்றுப்புற சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக பெருமை தெரிவிக்கின்றனர் இக்கல்லூரி பேராசிரியர்கள்.

பிளாஸ்டிக் மேலாண்மையில் அசத்தும் கல்லூரி

பிளாஸ்டிக் பிரிக்ஸ் தயாரிக்க சிமெண்ட், மணல் ஆகியவை மிகக் குறைந்த அளவே போதுமானது என்பதால், இதனை குறைந்த விலைக்கு கொடுக்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் வீடுகள் கட்டும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்க: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள் செய்து அசத்தும் பெண்கள்!

Intro:இந்தியாவின் நிலம் நீர் காற்று ஆகியவற்றில் அதி உச்ச மாசுபாட்டை ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் முதலிடம் வகிக்கிறது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டு மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக், இந்தியாவின் மக்கள் பயன்பாட்டில் இன்னமும் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள்.

இதனைக் கருத்தில் கொண்டுதான் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கும் உற்பத்திக்கும் இந்திய அரசும் தமிழக அரசும் தடை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இன்றளவும் ஒழிக்கப்படவில்லை என்பது யதார்த்தம். இந்த சிக்கலில் இருந்து மீள வழி, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களாக தருவதே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Body:அந்த வகையில் சேலம் சூரமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பிளாஸ்டிக் மறுசுழற்சி பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது எனலாம் .

குடிநீர் பாட்டில்கள் கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூள் தூளாக்கி கூழ் போல செய்து மீண்டும் அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் சேலம் சூரமங்கலம் தனியார் கல்லூரி வெற்றியும் கண்டிருக்கிறது.

இதுகுறித்து தனியார் கல்லூரி சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியை டாக்டர். ஆர். மாலதி கூறுகையில்," அன்றாட பயன்பாட்டில் ஒன்றிக் கலந்து விட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் வேறுவித பொருட்களாக மாற்றி பயன்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அந்த வகையில் பெட் பாட்டில்கள் எனப்படும் பிளாஸ்டிக்கை தூள் தூளாக செய்து அவற்றுடன் மணல் சிமெண்ட் ஆகியவற்றை சேர்த்து 'பிரிக்ஸ்' செங்கல்கள் உருவாக்க முடியும்.

இதை வெற்றிகரமாக நாங்கள் செய்து அதற்கான அறிவுசார் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறோம் . இந்த பிளாஸ்டிக் பிரிட்ஜ் செங்கற்களைப் போன்று உறுதியானது. அதேநேரத்தில் சூழலுக்கு கேடு விளைவிக்காது .

இந்த புதிய வகை பிளாஸ்டிக் பிரிக்ஸ் மூலம் அழகிய வீடுகள், மிகப்பெரிய அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றை குறைந்த பட்ஜெட்டில் கட்ட இயலும் .

இன்று சிறிய அளவில் வீடு கட்டுவதற்கு கூட பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அந்த அளவிற்கு கட்டுமான பொருட்களின் விலையேற்றம் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது .

இந்த நிலையில் குறைந்த பட்ஜெட்டில் வீடுகள் கட்டும் ஏழை எளிய நடுத்தர மக்களின் மக்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிளாஸ்டிக் பிரிக்ஸ் உருவாக்குவதற்காக சிமெண்ட் மணல் ஆகியவற்றின் அளவும் மிகக் குறைந்த அளவே போதுமானது.

இந்த பிளாஸ்டிக் பிரிக்ஸ் வெயில் காலத்தில் உருகாத தன்மைகொண்டது. மழை காலத்திலும் அதிக பனி பெய்யும் நேரத்திலும் இது எந்த வகை பாதிப்பையும் தராது.

அதேபோல நில நடுக்கம் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் பிரிக்ஸ் மூலம் கட்டப்படும் கட்டடங்கள் சேதம் அடையாது என்பது கூடுதல் சிறப்பு.

'பேடன்ட் ரைட்' கிடைத்ததும் பிளாஸ்டிக் பிரிக்ஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்காக சந்தைப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம் " என்று அவர் தெரிவித்தார்.

Conclusion:மக்களின் அடிப்படை தேவைகளில் குடியிருப்பு முதன்மையானது . வீடு என்பதன் அவசியத்தை அத்தியாவசியத்தை உணர்ந்துதான் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் வீடுகள் கட்ட கடனுதவி வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றன .

இந்த நிலையில் இதுபோன்ற மறுசுழற்சி பிளாஸ்டிக் பிரிக்ஸ் கண்டுபிடிப்பு எட்டாக்கனியாக இருக்கும் வீடு என்ற கனவை ஏழை எளிய மக்களுக்கு நனவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.