கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் பணியாற்றும் காவலர்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுப்பொருள்கள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் வழங்கினார். ஒவ்வொரு காவலரும்தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்கான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் இந்த நோய்த்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வைரஸ் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு அதன் குறுந்தகடுகளை காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாநகர காவல் ஆணையர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர துணை ஆணையர்கள் தங்கதுரை, செந்தில் உள்ளிட்ட காவல் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் பார்க்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!