கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில், ஆட்டோ இயக்க அனுமதி வழங்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்டோ ஓட்டுநர்கள், ’ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் ஆட்டோக்களை இயக்காமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கே அரசை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
எனவே, அரசு நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கிட வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய மீளா துயரத்திற்கு ஆளாகி உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு, தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனத்தினை இயக்க வழங்கப்படும் அனுமதியினை எளிமையாக்கவேண்டும் எனவும்; ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனைத்து வங்கிகளும் வட்டியில்லா கடன் வழங்கிட அரசு வழிவகை செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 'எப்போது வீடு திரும்புவோம்' - ஏக்கத்தில் வடமாநில லாரித் தொழிலாளர்கள்!