ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு புகார்: ஆட்டோ ஓட்டுநரின் நண்பனுக்கு சிறை! - salem auto driver rape case

சேலம்: பாலியல் புகாரில் கைதான ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜை மீண்டும் சிறையிலடைக்கவும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை 15 நாள் சிறையிலடைக்கவும் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

salem auto driver rape case
author img

By

Published : Oct 18, 2019, 8:08 AM IST

சேலம் மாவட்டம் காக்கா பாளையத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ்(40). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகப் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினர் மோகன்ராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மேலும் பல பெண்கள் மோகன்ராஜால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பல்வேறு புகார்கள் எழுந்தன. இவை அனைத்தையும் விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையை அமைத்தார். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தின் அனுமதியோடு மோகன்ராஜை ஏழு நாட்கள் காவலில் எடுத்து தனிப்படையினர் விசாரணை செய்தனர்.

மோகன்ராஜ் நண்பன் மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர்

இந்த விசாரணையில் மோகன்ராஜ் மறைத்து வைத்திருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்ஃபோனில் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இருந்துள்ளன. இதில் மோகன்ராஜால் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடியோவும் அடக்கம். தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர் மோகன்ராஜுக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனையும் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. மோகன்ராஜை காவலில் வைத்து விசாரிக்கும் நாள் இன்றுடன் முடிவடைந்ததால், சேலம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில் குமார், மோகன்ராஜை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நேற்று கைது செய்யப்பட்ட மோகன்ராஜின் நண்பர் மணிகண்டனும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதையடுத்து, மணிகண்டனும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:பாலியல் புகாரில் கைதான
ஆட்டோ ஓட்டுனர்மோகன்ராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்.
7 நாள் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைப்புBody:
சேலம் மாவட்டம் காக்கா பாளையத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் .

40 வயதான ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணை மிரட்டி பாலியல் கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது .
இதனையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மோகன்ராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மேலும் பல பெண்கள் மோகன்ராஜினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார்கள் எழுந்தது.
இதனை முழுவதும் விசாரிக்க சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்தார்.
இதில் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி,
காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் இடம்பெற்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை யடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் சேலம் நீதிமன்றத்தில் மோகன்ராஜை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் மோகன் ராஜ் மறைத்து வைத்திருந்த செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது .

இதில் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது .புகார் கூறப்பட செல்வியின் வீடியோவும் இருந்தது.பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர் மோகன் ராஜுக்கு உறுதுணையாக இருந்த அவனது கூட்டாளி
ஆட்டோ ஓட்டுனர்
மணி கண்டனை நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்து செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜின் போலீஸ் காவல இன்றுடன் முடிவடைந்தது.
இதனால் மோகன்ராஜ் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த 'நீதி துறை நடுவர் செந்தில் குமார் 7 நாள் போலீஸ காவல் முடிந்த மோகன்ராஜை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நேற்று கைது செய்யப்பட்ட மோகன்ராஜின் நண்பர் மணிகண்டனும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறை காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார் .
பின்னர் மணிகண்டனும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

.Visuval sent mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.