சேலம் அழகாபுரம் அருகேயுள்ள ரெட்டியூர் புது ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் சோலையப்பன்(74). பிரபல ஆடிட்டரான இவர் ஆடிட்டிங் வேலை சம்பந்தமாக மதுரை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று இரவு டேராடூன் சென்ற ரயிலில் சேலத்திற்கு திரும்பியுள்ளார்.
நேற்று அதிகாலை ரயில் சேலம் ஜங்கசன் ரயில் நிலையம் வந்தது. சேலம் வந்தது தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த வாலிபனை பயணிகள் சிலர் எழுப்பி விட்டுள்ளனர். ஆனால், அவர் இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றது. இருப்பினும் ஆடிட்டர் சோலையப்பன் ரயிலிருந்து இறங்கிவிடாலாம் என்று தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கமுயற்சித்துள்ளார்.
அப்போது கால் தவறி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கி ரயில் சக்கரம் சோலையப்பன் கழுத்துப் பகுதியில் ஏறி இறங்கியது. இதில், அவரது உடல் தனியாகவும் தலை தனியாகவும் துண்டாகி துடிதுடித்து உயிரிழந்தார். இதனையறிந்த சேலம் ஜங்ஷன் ரயில்வே காவலர்கள், சோலையப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் அவரது உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது. இச்சம்பவம் குறித்து ரயில் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சரை அருகில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் பேசிய கருணாஸ்