ETV Bharat / state

பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகி மர்ம மரணம்: கிணற்றில் மிதந்த உடல் - salem akila spinning mill worker mysterious death

சேலம்: சிஐடியு பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகி வெங்கடேசன், ஸ்பின்னிங் மில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொழிற்சங்க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

salem akila spinning mill worker mysterious death

author img

By

Published : Feb 28, 2020, 2:29 PM IST

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காப்பரத்தாம்பட்டி ஸ்ரீ அகிலா ஸ்பின்னிங் மில்லில், அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். இவர் கடந்த 26ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் வெங்கடேசன் கிணற்றில் இறந்து கிடப்பதாக, அவரின் மனைவி, உறவினர்கள் ஆகியோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெங்கடேசனின் மனைவி தேவகி, அவரின் உறவினர்கள், சிஐடியூ நிர்வாகிகள் அகிலா ஆகியோர் ஸ்பின்னிங் மில்லுக்குச் சென்று கிணற்றில் இறந்து கிடந்த வெங்கடேசன் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, "வெங்கடேசனின் இறப்பிற்கு மில் நிர்வாகம்தான் காரணம். வெங்கடேசன் சிஐடியு பஞ்சாலை தொழிற்சங்கத்தில் முன்னணி ஊழியராகச் செயல்பட்டார். மேலும், தொழிற்சங்கத்தில் இருந்துகொண்டு அடிக்கடி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.

அதுமட்டுமின்றி பல்வேறு தொழில் நெருக்கடிகளையும் அவருக்கு கொடுத்துள்ளது. அதன் விளைவாக சேலம் மாவட்டத் தொழிலாளர் துறையில் தொழில் தவா எழுதப்பட்டு, வெங்கடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொழிலாளர் நீதிமன்றம் ரத்துசெய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இதன் பின்னணியில் மேற்படி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த மேல்முறையீட்டில் வெங்கடேசனுக்கு வேலையும் பின் தேதியிட்டு சம்பளமும் வழங்க உத்தரவு வழங்கியது.

அதனடிப்படையில் ஆலை நிர்வாகம் வேலை மட்டும் வழங்கிவிட்டு, அவருக்கு சம்பளத்தை வழங்கவில்லை. தொடர்ச்சியாக நிர்வாகத்தால் வெங்கடேசனுக்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மரணத்திற்கு நிர்வாகம்தான் காரணம்" என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேபோல், தேவகி மேட்டூர் சார் ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில், ”ஆலை உரிமையாளர் ஆர். சுரேஷ்குமார், இயக்குநர் ராமசாமி, பர்சனல் ஆபீஸர் ஜெயவேல், மேற்பார்வையாளர்கள் நாகராஜ், கோவிந்தராஜ், மேலாளர் செல்வராஜ் ஆகிய ஆறு நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம், சேலம் தொழிலாளர் நீதிமன்றம் வழக்கிலுள்ள தீர்ப்புப்படி நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வெங்கடேசனின் உடற்கூறாய்வு, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். அகிலா ஸ்பின்னிங் மில்லில் பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 8 மணி முதல் 27ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை உள்ள ஆலையின் சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்கடேஷின் உடல் தற்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் தொழிலாளர்களிடம் அத்துமீறல்: பாஜக பிரமுகர் அதிரடி கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.