ETV Bharat / state

மகாராஷ்டிரா நபருக்கு தவறுலதாக ரூ.8.64 லட்சம் வழங்கிய சேலம் ஆதிதிராவிடர் நலத்துறை! - Salem Adithravidar Welfare Department

சேலம்: மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.8.64 லட்சத்தை தவறுதலாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு ஆன்லைனில் பரிமாற்றம் செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

மகாராஷ்டிரா நபருக்கு தவறுலதாக ரூ.8.64 லட்சம் வழங்கிய சேலம் ஆதிதிராவிடர் நலத்துறை

author img

By

Published : Oct 31, 2020, 2:45 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்துறையின் வங்கி கணக்கு, சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக கணக்கில் இருந்து ஊரகப்பகுதி நிதியை மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரூ.8,64,500 ஆதிதிராவிடர் நலத்துறை ஊரகப்பகுதி வங்கியின் குறிப்பிட்ட கணக்குக்கு மாற்றப்பட்டது. ஆனால், ஆன்லைன் மூலம் மாற்றம் செய்த ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரோகித்குமார் என்பவரின் வங்கி கணக்கு எண்ணுக்கு தவறுதலாக மாற்றம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

ஊரகப்பகுதி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் தங்களுக்குரிய பணம் பரிமாற்றம் செய்யாததை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்திற்கு வந்து அலுவலர்களை சந்தித்து, தங்களுக்கு பணம் வரவில்லை உடனே பண பரிமாற்றம் செய்யுங்கள் என்று புகார் தெரிவித்தனர்.

அப்போது அலுவலத்தில் இருந்த அலுவலர்கள், பண பரிமாற்றம் செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊரகப்பகுதி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் உடனே சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது தான் ரூ.8.64,500 தவறுதலாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோகித்குமாரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பதை கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாரத ஸ்டேட் வங்கி ரோகித் குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப வங்கியில் செலுத்துமாறு கேட்டனர். ஆனால் ரோகித் குமார் பணத்தை திருப்பி செலுத்த மறுத்து உள்ளார். இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.