சேலம் பால்பண்ணை அருகே உள்ள சித்தனூர் பகுதியில் உள்ள ஆர்.ஆர். ஜுவல்லரியில் நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் கொள்ளையர்கள் 12 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற இரும்பாலை பகுதி காவல் துறையினர் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் கொள்ளையர் முகமூடி அணிந்து திருடிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கொள்ளையர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் ஆய்வாளர் தனசேகரன் தலைமையின்கீழ் தொடர்ந்து இரும்பாலை பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டீசல் நிரப்ப சென்ற இடத்தில் பற்றி எரிந்த கார்!