ETV Bharat / state

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சேலத்தில் ஆர்ப்பாட்டம்!

சேலம்: பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நேற்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

public-welfare-workers-demonstration-in-salem
author img

By

Published : Nov 9, 2019, 7:26 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் பட்டினிப் போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. பட்டினிப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 நவம்பர் 8ஆம் தேதியன்று பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களைக் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: வரும் ஜனவரி முதல் ஆன்லைன் பரிவர்தனைக்கு கட்டணமில்லை ரிசர்வ் வங்கி

Intro:பணிநீக்கம் செய்யப்பட்ட
மக்கள் நலப் பணியாளர்கள் இன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.Body:

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் மக்கள் நல பணியாளர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 8. 11 .2011 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் , அந்த ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்வாதாரங்களை காக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Conclusion:
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் இன்று மாலை விடுதலை செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.