சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த பல வாரங்களாக இளம்பிள்ளை பகுதிகளில் குடிநீர் , இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கவில்லை.
மேட்டூர் அணையில், 120 அடி வரை , முழுக் கொள்ளளவு நீர் இருந்தும் அருகில் உள்ள இளம்பிள்ளை பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. இது குறித்து அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளம்பிள்ளை மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே இளம்பிள்ளை - சேலம் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க:
சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு - குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்!