சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 விவசாயிகளின் நலனை முற்றிலும் பாதிக்கும்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் திட்டத்தையும் இனி எதிர்த்துப் போராட முடியாத சூழல் உருவாகும். எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடியது அனைத்தும் வீணாகிவிடும்.
அதேபோல குலக் கல்வியை மீண்டும் கொண்டுவரும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுபோல தொடர்ந்து மத்திய அரசு கரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முழுவதும் உடைத்துவிட்டு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது.இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
எதிர்க்கட்சிகள் விழித்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத சட்ட திருத்தங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடவேண்டும். எங்களது உயிரைக் கொடுத்தேனும் மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை எதிர்ப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றை ஒழிக்க நடத்தப்பட்டு வரும் மகா நவசன்டி யாகம்!