ETV Bharat / state

கரோனா பாதிப்பால் மூடப்பட்ட தனியார் பள்ளி: கதறும் பெற்றோர்கள்!

சேலம்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் தனியார் பள்ளி மூடப்பட்டது.

கரோனா பாதிப்பால் தனியார் பள்ளி மூடல்
கரோனா பாதிப்பால் தனியார் பள்ளி மூடல்
author img

By

Published : May 12, 2021, 3:14 PM IST

கரோனா பொதுமுடக்கம் நடைமுறையிலுள்ள நிலையில் நிதி பற்றாக்குறையால் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக தொற்று ஏற்பட்டு அனைத்து பள்ளிகளும் செயல்படாமல் உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை தர முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள விநாயகா வித்யாலயா தனியார் பள்ளி நிர்வாகம் 'தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி செயல்படாது' என பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தில் மீதித் தொகையை செலுத்தி மாணவர்களின் டி.சி மற்ற சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு மாற்று பள்ளியில் உங்களது குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அந்த குறுஞ்செய்தியில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று (மே 12) விநாயக வித்யாலயா பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியில் தகவல் தெரிவிக்க கூட யாரும் இல்லை என்பதையறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பள்ளி முதல்வருக்கு தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் அழைப்புகளை ஏற்கவில்லை.

இதனால், சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பாக கூடினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பெற்றோர் கூறியதாவது, ”திடீரென பள்ளி மூடப்பட்டதால் குழந்தைகளின் கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளியின் தலைமை நிர்வாகிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் . தங்களால் மாற்று பள்ளியில் தற்போது எங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

தற்போது கரோனா தொற்று காலத்தில் தங்களின் வாழ்க்கை நடத்துவதற்கே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த பள்ளியிலிருந்து எங்களுக்கு வந்த இந்த குறுஞ்செய்தி மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் படிக்க வைப்பது என புரியவில்லை. உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.