ETV Bharat / state

சேலத்தில் களை கட்டிய மாட்டுப் பொங்கல் விழா - pongal

சேலத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட கால்நடைகளை வண்ணங்களால் அலங்கரித்து விவசாய நிலத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தி விவசாயிகள் கொண்டாடினர்.

சேலத்தில் களை கட்டிய மாட்டுப் பொங்கல் விழா

author img

By

Published : Jan 15, 2022, 3:39 PM IST

Updated : Jan 15, 2022, 3:52 PM IST

சேலம்:தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகு விமர்சையாகப் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இன்றைய தினம் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாட்டுப்பொங்கல் என்பது உழவிற்கு நண்பனாகத் திகழும் மாடைப் போற்றிக் கொண்டாடும் தமிழர் நாளாகும்.அப்படிப்பட்ட மாட்டுப் பொங்கல் விழா உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாடுகளை அலங்கரித்து,அதன் கொம்பிற்கு வண்ணம் பூசி ஊர்வளமாக எடுத்துச் சென்றும்,சேவல் சண்டை,ஜல்லிகட்டு போன்ற தமிழர்களின் மரபு விளையாட்டுகளை நிகழ்த்தியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் செட்டிச்சாவடி பகுதியில் விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி விவசாய நிலத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். அதிகாலை நேரத்தில் எழுந்து ஆடு,மாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கால்நடைகளைக் குளிப்பாட்டி , பல்வேறு வண்ணப் பொடிகளால் அலங்கரித்து விவசாய நிலத்தில் கட்டி வைத்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பொங்கல் வைத்து சூரியபகவானுக்குப் படைத்து கால்நடைகளைக் கட்டி வைத்துள்ள பட்டியைச் சுற்றிவந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதையடுத்து ஆடு, மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை விவசாயிகள் குடும்பத்துடன் சேர்ந்து ஊட்டி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாய நிலத்தில் உழவு செய்தல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வண்ணங்கள் பூசி விவசாய நிலத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கு மரியாதை செய்ததாகவும், பொங்கல் பண்டிகை என்பது எங்களுக்கு குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு சிறப்பு வாய்ந்த பண்டிகை எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை - பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...

Last Updated : Jan 15, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.