சேலம்: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வேலையைத் தான் பாமக செய்துவருகிறது என்றும் ராமதாஸும், அன்புமணியும் இட ஒதுக்கீடு விவாகரத்தை வைத்து பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்றும் சேலத்தில் தேர்தல் பரப்புரை செய்த தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பதற்காக 400 கோடி ரூபாய் வாங்கியதாக குற்றஞ்சாட்டிய அவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க 1,000கோடி ரூபாய்வரை பேரம் பேசுவதாக சொல்லிக் கொள்கிறார் என்றார்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சட்டத்தின் படி ராஜா, கனிமொழி இருவருமே குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் சேலம் இரும்பாலை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விளைநிலங்கள், விவசாயிகள் பாதிப்படையாத வகையில் சாலைத்திட்டங்களை நிறைவேற்றலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த சேலம் வெள்ளி உற்பத்தி தொழிலாளர்கள்!