சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயற்கை நமக்களித்த அளவற்ற செல்வம். ஆனால் தற்போது இந்த இயற்கை பல்வேறு காரணங்களால் வேகமாக அழிந்து வருகிறது.
சுற்றுச்சூழல் மாசடைந்து அனைவரும் பசுமையான காற்றை மறந்து புகையை சுவாசித்து வருகிறோம் என்பதை உணர்த்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு மனிதனும் மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சேலம் மாசுக்கட்டுப்பாடு அசோசியேசன் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தொடங்கியது.
இந்த மரம் நடும் பணியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய மரக்கன்றுகள் நடும் பணி அடுத்த இரண்டு மாத காலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து, மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் - 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மரம்!