ETV Bharat / state

தேர்வுக்கு அனுமதிக்காததை கண்டித்து ஆசிரியர்கள் சாலை மறியல்!

author img

By

Published : Sep 27, 2019, 10:04 PM IST

சேலம்: போட்டித் தேர்வு எழுத வந்த முதுகலை ஆசிரியர்கள் இணையதள தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக அனுமதிக்கப்பட்டனர், அதனைக் கண்டித்து ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Pg teachers road roko

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு சேலத்தில் சில தனியார் கல்லூரிகளில் அதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டது. சேலம்-அரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

அப்போது, கல்லூரியில் இணையதள சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்வு நேரம் நெருங்கியதால் பதற்றமடைந்த ஆசிரியர்கள் தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்து தங்களை விரைவாக தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேலம்-அரூர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் சமாதான போச்சுவார்தை நடத்தினர். இதற்கிடையில் சிறிது நேரத்தில், கல்லூரியில் இணைய சேவை சீரானதும் ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்குள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சேலம்-அரூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

மேலும் படிக்க: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் விஷால்!

'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்...!' - சர்வதேச நிறுவனம் பாராட்டு

Intro:
இணையதள தொழில் நுட்ப கோளாறு காரணமாக போட்டி தேர்வு எழுத அனுமதி கிடைக்காத்தால் முதுகலை ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Body:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

சேலத்தில் சில தனியார் கல்லூரிகளில் அதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டது. சேலம் - அரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

அப்போது, கல்லூரியில் இணையதள சேவையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கபட்டது.

தேர்வு நேரம் நெருங்கியதால் பதட்டமடைந்த ஆசிரியர்கள் தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்து தங்களை விரைவாக தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் சமாதான போச்சுவார்தை நடத்தினர்.

சாலை மறியல் போராட்டம் காரணமாக சேலம் - அரூர் செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

Conclusion:
பின்னர் சிறிது நேரத்தில், கல்லூரியில் இணைய சேவை சீரானதும் ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்குள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் .

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.