ETV Bharat / state

8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியவர்களை வெற்றி பெறச் செய்த மக்கள்!

author img

By

Published : Jan 2, 2020, 8:00 PM IST

சேலம்: 8 வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறச்செய்த நிகழ்வு அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எட்டுவழிச்சாலை வேட்பாளர் வெற்றி  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கருத்துப்பரப்புரை மேற்கொண்டவர்கள் வெற்றி  சேலம் மாவட்டச் செய்திகள்  சேலம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்  salem local body election results  pepole elected the candidate who did propagandaa against 8 way road plan
எட்டு வழிச்சாலைக்கு எதிராக கருத்துப்பரப்புரை மேற்கொண்டவர்களை வெற்றி பெறச் செய்த மக்கள்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு குழுவின் பிரதிநிதிகளான செல்வராஜ், ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இவ்விருவரும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய செல்வராஜ், ‘எட்டு வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை குப்பனூர் தொகுதி விவசாயிகளிடம் நாங்கள் தொடர்ந்து எடுத்துக்கூறி வந்தோம். அதுனுடைய விளைவாக அந்த சாலைப் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எட்டுவழிசாலை எதிர்ப்பு குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துகளைக் கூறி வந்ததால் எங்களை வார்டு கவுன்சிலராகப் போட்டியிட கிராம மக்கள் ஆர்வமுடன் ஊக்கப்படுத்தினர்.

வெற்றி பெற்றவர் பேட்டி

தற்போது எங்களுக்கு வெற்றியையும் குப்பனூர் மக்கள் தந்துள்ளனர். வருங்காலங்களில் குப்பனூர் ஊராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்போம்’ என்றார். இதேபோன்று எட்டுவழிச்சாலைக்கு எதிராக மக்களிடம் கருத்துப்பரப்புரை மேற்கொண்ட தமிழரசன் என்பவர் குட்டப்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்களின் வெற்றி அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் முடிவுகளை ஆமை வேகத்தில் பதிவிடும் தேர்தல் ஆணைய இணைதளம்!

Intro:எட்டு வழிச்சாலையில் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்து உள்ளனர்.

Body:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர் ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக செல்வராஜ் ஆகிய இருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.

இந்த வெற்றி குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த எட்டு வழி சாலை எதிர்ப்பு குழுவின் பிரதிநிதி செல்வராஜ் கூறுகையில் எட்டு வழி சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குப்பனூர் தொகுதி விவசாயிகளிடம் நாங்கள் தொடர்ந்து எடுத்துக்கூறி வந்தோம் அதனுடைய விளைவாக அந்த சாலை பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் எட்டுவழிசாலை எதிர்ப்பு குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துக்களை கூறி வந்து எங்களை வார்டு கவுன்சிலராக போட்டியிட கிராம மக்கள் ஆர்வமுடன் ஊக்கப்படுத்தினார் தற்போது எங்களுக்கு வெற்றியையும் குப்பனூர் மக்கள் தந்துள்ளனர் வரும் காலங்களில் குப்பனூர் ஊராட்சி பகுதியில் உள்ள பிரச்சனைகளை எங்களது பதவியைக் கொண்டு தீர்த்து வைப்போம் என்று தெரிவித்தனர்.

பேட்டி: (செல்வராஜ்) குப்பனூர் 5-ஆவது வார்டு உறுப்பினர்.

(தமிழரசன்) ஆச்சான் குட்டப்பட்டி பஞ்சாயத்து ஆறாவது வார்டு உறுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.