தாய், தந்தை, மகன், மகள், தாத்தா , பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை என்று பல்வேறு உறவுப் பெயர்களோடு உதிரத்தில் கலந்த உறவுகளோடு இருக்கும் குடும்பங்களைவிட்டு, ஏதாவது ஒரு சண்டையில், மனக்கசப்பில், வெறுப்பில், அச்சத்தில் பிரிந்து வெளியே உதிரிகளாகத் திரியும் நிலை, எந்த ஒரு மனிதருக்கும் வரக்கூடாது.
ஆனால், அந்த துயர வாழ்க்கையை ஒருவர் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? உறவுகளைத் துண்டித்துக்கொண்டு மொழி தெரியாத பூமியில் திரியும் நபர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தேடினால், அது மனித வாழ்க்கையின் இன்னொரு துயரத்தை கண்டடைவதாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல.
கடந்த 7 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 386 நபர்கள் காணாமல் போயுள்ளதாக காவல் துறை பட்டியலிட்டுள்ளது. இவர்களில் சேலம் மாநகரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 210 பேர். ஆனால், தொடர்ந்து பல்வேறு தேடல் நடவடிக்கைகளில், இவர்களில் ஒருவரைக்கூட காவல் துறையினரால் கண்டுபிடித்து உறவினர்களுடன், சேர்த்துவைக்க இயலவில்லை என்பதே திடுக்கிடும் யதார்த்தமாக இருக்கிறது.
இது தொடர்பாக சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் சந்திரசேகரன் கூறுகையில் ," குடும்பங்களிலிருந்து உறவுகளைத் துண்டித்துக் கொண்டு வெளியேறும் நபர்களின் நிலை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.கூட்டுக்குடும்ப உறவு முறைகளில் ஒரு நபருக்கு பிரச்னை என்றால், இன்னொரு உறவுக்காரர் துணையாக இருந்து, பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். ஆனால், தற்போது கூட்டுக்குடும்ப முறை அருகிப்போனதால், தனிக் குடும்பங்களில் வாழ்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு துணை இல்லை.
இதனால், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்போது, மனம் வெறுத்து வெளியே வரும் இளைஞனோ அல்லது இளம்பெண்ணோ அல்லது முதியவர்களோ யாராக இருந்தாலும் வெளி நபர்களின் உதவியோடு தங்கள் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
அப்போது அவர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் வெளிநபர்கள், அவர்களின் குடும்ப செல்வத்தை திருடுவதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொடுத்து விடுகின்றனர். இதனால் நிறைய இழப்புகளை, குடும்பத்தை விட்டு வெளியே வரும் நபர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதுபோன்று இல்லாமல் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டால் அமர்ந்து பேசி தீர்வு காண ஒவ்வொருவரும் முயற்சித்தால் யாரும் இங்கே காணாமல் போக மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
சேலம் மாநகர காவல் துறை சார்பில், கடந்த வாரத்தில் இரண்டு முறை காணாமல் போனவர்களை கண்டறிய உதவிடும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சேலம் மாநகரம் மற்றும் மாவட்டக் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட காணாமல் போனவர்களின் விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவை திரையிட்டு காட்டப்பட்டது.
காவல் துறையினர் சார்பில் திரையிடப்பட்ட புகைப்படங்களில் ஒருவர் கூட அடையாளம் காணப்படவில்லை என்பதே இந்த சிறப்பு முகாமில் கிடைத்த முடிவு. இது காவல் துறை அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர், மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்தப் புகார்களை விரைந்து விசாரித்து இன்னும் கூடுதல் கவனத்துடன், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காணாமல் போகும் நிலை ஒருவருக்கு ஏன் வருகிறது அந்த நிலையை ஒருவர் அடைந்து விடக்கூடாது என்பதில் குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜென்னீஸ் அறக்கட்டளைத் தலைவர் கர்லின் எபி விரிவாக நம்மிடையே எடுத்துரைத்தார் .
நமக்கு கர்லின் எபி அளித்த சிறப்புப் பேட்டியில், "சேலம் மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக தன்னார்வத் தொண்டு நிறுவன ஆர்வலராக இருந்து வருகிறேன். குடும்பங்களிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அன்போடு பழகிட வேண்டும். டிஜிட்டல் உலகத்தில் கம்ப்யூட்டர், மொபைல் என்று குழந்தைகள் நேரத்தை செலவழிக்காமல், உறவுகளோடு கலந்து உரையாடி, விளையாடி மகிழ்ந்து இருக்கும் வகையில் குடும்ப நிலையை வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடுகளில் இருந்து வெளியேறி உறவுகளைவிட்டுச் செல்லும் நபர்கள் மீட்கப்படுகின்றனரா - ஓர் கள ஆய்வு - குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்போது மனம் வெறுத்து வெளியே வரும் இளைஞர்கள்
குடும்ப உறவுகளில் இருந்து தொடர்புகளை துண்டித்துக் கொண்டு, சிலர் காணாமல் போய்விடுகின்றனர். அதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மனதளவில் நொறுங்கிப்போய்விடுகின்றனர். உறவுகளே வேண்டாம் என்ற அளவிற்கு, வீட்டைவிட்டு சிலர் செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து சேலம் மாநகரில் ஓர் கள ஆய்வு...