பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று குமரகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முருக கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை குமரகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.