சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு வாடகைப் பணம் செலுத்தாமல் செயல்பட்டுவந்ததால் கடைகள் அனைத்துக்கும் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி இந்த வணிக வளாகத்தைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் சுமார் 70 வயதுக்குள்பட்ட முதியவர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு படுகொலைசெய்யப்பட்டிருப்பதாக நகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடரந்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் யார் யார் வந்தார்கள், எதற்காக முதியவரை கொலைசெய்தார்கள் என்பது குறித்து சிசிடிவி கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் வணிக வளாகம் பகுதிகளில் காவலர்கள் சிலர் ரோந்துப் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: நிலப் பிரச்னை தொடர்பாக சொந்த சகோதரனையே குத்திக் கொலைசெய்த கொடூரம்