நடந்து முடிந்த 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் வெற்றிபெற்ற மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையம் சார்பில் நேற்று பரிசளிக்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை வழங்கினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.