ETV Bharat / state

வேப்ப மரத்தில் பால் வடிந்தால் மாரியம்மா மகிமை கிடையாது! - வேப்பமரத்தில் வடிந்த பால்

சேலம்: வேப்பமரத்தில் பால்வடிவதைக்கண்ட மக்கள் மாரியத்தாள் மகிமை என நினைத்து நூதன முறையில் சாமி கும்பிட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

neem milk
author img

By

Published : Sep 17, 2019, 11:21 AM IST

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் தன்னுடைய வீட்டின் முன்பு நிழலுக்காக வேப்பமரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த மரத்தின் கிளைகளில் இருந்து திடீரென தாரை தாரையாக பால் வடிந்து கீழே ஊற்றியது. தொடர்ந்து நான்கு நாட்களாக அதிக அளவில் வற்றாமல் பால் வடிந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனைப் பார்த்து வியந்து போன அப்பகுதி மக்கள் அந்தப் பாலை பிடித்து பிடித்து குழந்தைகளுக்கு கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

வேப்பமரத்தில் வடியும் பால்

வேப்பமரத்தில் பால்வடிவது மாரியம்மாள் மகிமையும் இல்லை, மக்களின் அறியாமையால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. வேப்பமரத்தில் பால் வடிவது அறிவியல் நிகழ்த்தும் அதிசயமாகும். வேப்ப மரத்திற்கு அருகில் அதிகம் தண்ணீர் இருந்தால், மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகி, அதன்காரணமாய் வேப்பமரப் பட்டைக்கு அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்படுகிறது.

இதனால் மரப்பட்டைகள் வெடிக்க, மரத்திலுள்ள மாவுச்சத்து அதிகத் தண்ணீர் கலந்து பால்போல் மாறி, அந்த வெடிப்பின் வழியே கசிந்து சொட்டும். இதைத்தான் வேப்பமரத்தில் பால்வடிவதாக நாம் எண்ணுகிறோம், காரணம் புரியாததால் மாரியாத்தாள் மகிமை என்று நம்புகிறோம்.

Intro:ஓமலூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பால் வடியும் வேப்ப மரத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூஜைசெய்து அந்த பகுதிமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
Body:

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த
தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் தன்னுடைய வீட்டின் முன்பு நிழலுக்காக வேப்பமரம் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் மரத்தின் கிளைகளில் இருந்து திடீரென தாரை தாரையாக பால் வடிந்து கீழே ஊற்றுகிறது.

இந்த மரத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக அதிக அளவில் வற்றாமல் பால் வடிந்து வந்து கொண்டே இருக்கிறது. வேப்பமரத்தின் உச்சி பகுதியில் இருந்து பால் சொட்டு சொட்டாக கீழே விழுவதால் அதைபொதுமக்கள் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

மேலும் இந்த வேப்பமரபால் நோய் எதிப்பு சக்தி இருப்பதாக கூறியும் பெரியவர்களும் சாப்பிடுகின்றனர். மேலும், கிராம மக்கள் சிலர் அந்த வேப்பமரத்திற்கு மஞ்சள் துணியை கட்டி மஞ்சள் குங்குமம், தேங்காய், பழம் வைத்து கற்பூரம், ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

மரத்தில் தொடர்ந்து பால் வடிந்து கொண்டே இருப்பதை அப்பகுதி பொதுமக்கள் வந்து பார்த்து மரத்தை தரிசனம் செய்து செல்கின்றனர். வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி தெரிந்து, சின்னப்பம்பட்டி மட்டுமல்லாது பாப்பம்பாடி, இளம்பிள்ளை, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து அதிசயமான பார்த்து செல்கின்றனர்.

Conclusion:
ஓமலூர் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் தகவல், பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.