சேலம்: வீராணத்தை சேர்ந்த ராஜேஷ (44) என்பவருக்கும் , ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குறிச்சி தமிழ் (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 2015 ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு விமல் பிரணவ் (7), கார்த்திக் பிரணவ் (4) என இரண்டு மகன்கள் இருந்தனர்.
குறிஞ்சி தமிழுக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வருவதே ராஜேஷ்க்கு வேலையாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை (மார்ச் 16) குறிஞ்சி தமிழுக்கும், அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் இருவரையும் சமாதானம் செய்து வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து நேற்று (மார்ச் 16) மாலை, ராஜேஷின் தாயார், ராஜேஷை தொடர்பு கொண்டு, குறிஞ்சி தமிழ் குழந்தைகளுடன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், வீட்டிற்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறிஞ்சி தமிழ், இரண்டு மகன்களுடன் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ், வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குறிஞ்சி தமிழ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், குறிஞ்சி தமிழ் தனது இரண்டு மகன்களையும் முதலில் தூக்கிலிட்டு கொன்று விட்டு, பின் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: வரதட்சணைக்காகப் பெண் வனஅலுவலரின் கருவைக் கலைத்த கொடூரம்; 4 பேர் மீது வழக்குப்பதிவு!