சேலம்: இதுதொடர்பாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "மே 27ஆம் தேதி காலை 11.30 மணியளவில் சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் கலப்பட மசாலா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் பழனியப்பன் என்பவரது ஜானிஸ் ஏற்காடு மசாலா நிறுவனத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது மிளகு தோல் கொண்டு மிளகு தூள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிக்கன் 65 மசாலா செயற்கை நிறமி கலந்து தயாரிப்பது கண்டறியப்பட்டது. கலப்பட மிளகு தோல் - 320 கிலோ மற்றும் கலப்பட மசாலா பொருட்கள் - 317.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட மசாலா பொருட்களின் மதிப்பு சுமார் - ரூ. 1,03,690 ஆகும்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மசாலா பொருட்களில் இருந்து இரண்டு சட்ட பூர்வ உணவு மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்