சேலம்: மேட்டூர் அணையில் நேற்று (ஜூலை 12) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 73.55 அடியாக இருந்தது. பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,093 கன அடியிலிருந்து 2,007 கன அடியாக குறைந்துள்ளது.
நீர் வெளியேற்றம் குறைவு
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதால், காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைத்து, நேற்று இரவு முதல் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 35.82 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்தே தீருவோம்' - துரைமுருகன் பதிலடி