கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து உள்ளது. நேற்று நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 5 ஆயிரத்து 75 கன அடியாக இருந்த நிலையில், இன்று (செப்.2) காலை நிலவரப்படி 6 ஆயிரத்து 522 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக 1,800 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்தை விட நீர்திறப்பு அதிக அளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 89.81 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று (செப்.2) காலை சரிந்து 89.01 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 51.52 டிஎம்சியாக உள்ளது.