ETV Bharat / state

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஆலோசனைக் கூட்டம் - farmers income

சேலம்: விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பது என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவது தொடர்பான மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களும் கலந்துகொண்டனர்.

farmers
author img

By

Published : Jul 9, 2019, 11:15 PM IST

அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் குறைந்த நீரில் விவசாயம் செய்து விவசாயிகள் தங்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கிக் கொள்வது தொடர்பான மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய விவசாய முறையில் இருந்து அறிவியல்சார் விவசாய முறைக்கு மாறுவதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்ற விவசாய நிலையை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி பரசுராமன் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மழைப்பொழிவு பற்றாக்குறை சந்தைப் போக்குகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவை குறித்து நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.

சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

மேலும், நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி, விவசாயிகள் ஒருங்கிணைந்து பண்ணை முறைக்கு மாற வேண்டும் என்றும் பயிரிடுவது மட்டுமின்றி விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களை ஒருங்கிணைக்கும்போது விவசாயிகள் வருமானம் கூடுதல் ஆகும் என்றார்.

இதனையடுத்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி பரசுராமன் கூறுகையில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதைவிட உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மத்திய கூட்டுப் பொருளாக மாற அரசு தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்றார்.

Intro:விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவது என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் மற்றும் அதனை எதிர் கொள்வதால் தொடர்பான மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்.

Body:மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் விவசாய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கின்ற வகையிலும் தற்போதுள்ள காலகட்டத்தில் குறைந்த நீரில் விவசாயம் செய்து விவசாயிகள் தங்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கிக் கொள்வது தொடர்பான மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விவசாய முறையில் இருந்து அறிவியல்சார் விவசாய முறைக்கு மாறுவதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்ற விவசாய நிலையை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி கூறுகையில் விவசாயிகள் ஒருங்கிணைந்து பண்ணை முறைக்கு மாற வேண்டும் என்றும் பயிரிடுவது மட்டுமின்றி விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களை ஒருங்கிணைக்கும் போது விவசாயிகள் வருமானம் கூடுதல் ஆகும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி பரசுராமன் கூறுகையில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை விட உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மத்திய கூட்டுப் பொருளாக மாற அரசு தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்றார் இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேசபூபதி, எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி பரசுராமன் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மழைப்பொழிவு பற்றாக்குறை சந்தைப் போக்குகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவை குறித்து நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.

பேட்டி

1.குழந்தை வேலு: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்.

2.முருகேச பூபதி :தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.