ETV Bharat / state

சேலம் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக் குழு அனுப்பிவைப்பு

author img

By

Published : Nov 26, 2020, 6:13 PM IST

சேலம்: நிவர் புயல் பாதித்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிட சேலத்திலிருந்து 20 சுகாதார மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Salem
Nivar cyclone

நிவர் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை வழங்கிட சேலம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 20 மருத்துவக் குழுவினர் வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவசர கால மருத்துவ சேவைக்குத் தேவைப்படும் மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், கிருமி நாசினிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை போதுமான அளவிற்கு மருத்துவக் குழுவினருடன் அனுப்பிவைக்கப்பட்டதாக சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

ஒரு மருத்துவர், இரண்டு உதவியாளர், மருந்தாளுநர் ஒருவர் என வாகனத்திற்கு நான்கு பேர் வீதம் 80 பேர் 20 வாகனங்கள் மூலம் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சேலம் மாநகராட்சி, சேலம் மாவட்ட பேரூராட்சிப் பணியாளர்கள் 110 பேர் கடலூர் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.